இந்திய திருநாட்டின் அறிவியல் முன்னேற்றத்தின் உச்சிக்கு சென்று இருக்கின்றோம் என்பதை பறைசாற்றும் விதமாக இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் செயற்கை கோள் உள்பட இன்று 100 வது திட்டத்தை வெற்றிகரமாக இந்தியா செயல்படுத்துகிறது. .இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மூத்த அறிவியல் விஞ்ஞானிகள் ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்தில் குவிந்திருக்கின்றனர். 100 வது செயற்கை கோள் என்பதால் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் நேரிடையாக பங்கேற்றுள்ளார்.
இதற்கான கவுன்டவுன் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று காலை 9. 51 க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த செயற்கைகோள் சுமந்து செல்லும் ராக்கெட் சரியான பாதை நோக்கி செல்கிறது.
இந்தியாவின் அறிவியலில் மைல்கல்:
இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் மைல்கல்லாக 100-வது செயற்கை கோள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோவின் இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவின் சார்பில் செலுத்தப்பட்ட ஆர்யபட்டா செயற்கைகோள் முதற்கொண்டு இதுவரை ராக்கெட் மற்றும் செயற்கை கோள் என மொத்தம் 99 எண்ணம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று அனுப்பும் திட்டம் 100 வது திட்டமாகும்.
வர்த்தக ரீதியில் செயல்பாடு :
தற்போது பி.எஸ்.எல்.வி.சி-21 என்ற செயற்கைகோள் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோளில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சிறிய வகை செயற்கைகோளும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்பாட் -6 என்ற 750 கிலோ எடை கொண்ட செயற்கைகோளும் அனுப்பப்படுகிறது. இது இன்று வெற்றிகரமாக செலுத்தப்படும். இந்தியாவின் செயற்கைகோள் ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு மைல் என்றார் பெருமிதத்துடன்.
இதுவரை 37ர ராக்கெட்டுகளையும், 62 செயற்கைகோளையும் இந்தியா அனுப்பி இருக்கிறது.
பிரதமர் கைத்தட்டி மகிழ்ந்தார்
: இன்றைய நிகழ்ச்சியை நேரிடையாக பார்க்க வந்திருந்த பிரதமர் , ராக்கெட் விண்ணில் செலுத்தும்போது மிக உன்னிப்புடன் கவனித்து கொண்டிருந்தார். விண்ணில் சென்றபோது பிரதமர் கைத்தட்டி விஞ்ஞானிகளுடன் மகிழ்ந்தார்.
உலக அளவில் பெருமை:
இன்றைய செயற்கைகோள் ஏவப்பட்டிருப்பது உலக அளவில் நமக்கு பெருமை அளிக்கிறது. இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த திட்டத்திற்கு அனைவரையும் பாராட்டுகிறேன். வரலாற்று சாதனையின் இஸ்ரோவின் இந்த முயற்சி இந்திய அறிவியல் தொழில்நுட்பத்திற்கு இது ஒரு மைல்கல் ஆகும்.
No comments:
Post a Comment