Friday, 31 August 2012

47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன.

பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, 30 August 2012

பள்ளி ஆசிரியர், மாணவர் மற்றும் கல்வி மேலாண்மை தகவல் முறையை ஒருங்கிணைத்து 2012- 13 கல்வியாண்டு முதல் ஸ்மார்ட் கார்டு (Smart Card) வழங்க எதுவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப - தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவு

PROCEEDING & APPLICATION

பதிவுமூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1,185 பேர் தேர்வு

பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தேர்வு தொடர்பாக, ஏற்கனவே ஒரு முடிவுவெளியிடப்பட்டு, பதிவுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்கள், விடுபட்ட பதிவுதாரர்கள் என, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பிடித்தனர். 162 பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட சில பிரிவுகளில் பதிவுதாரர்கள் இல்லாததால், இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த தேர்வில் இருந்து, இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது.

10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு

நடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

 முழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.இந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டம் காரணமாக தேர்வுகள சரியாக எழுத முடியாத நிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையை மாற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வைப் போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதன் எதிர்லியாக தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

Wednesday, 29 August 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக 1,134 ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.தகுதித் தேர்வு முடிவு.

   கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 63/4 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினார்கள். ஆனால், அவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
வெற்றி பெறாதவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நேரம் போதாது என்று தேர்வு எழுதிய அத்தனை ஆசிரியர்களும் புகார் தெரிவித்ததால் அரசு இந்த சலுகையை அளித்து தேர்வு நேரத்தையும் 3 மணி நேரமாக உயர்த்தி இருக்கிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர் வேலை வழங்கப்படும்.

1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமனம்


   இதற்கிடையே, இந்த தகுதித்தேர்வு மூலமாக 1,134 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வழக்கமாக ஆசிரியர் பயிற்றுனர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தனியாக போட்டித்தேர்வு நடத்தும். ஆசிரியர் பயிற்றுனர் பதவியும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானது என்பதால் அந்த காலி இடங்களையும் தகுதித்தேர்வு மூலமாகவே நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


   தற்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களைக் கொண்டு ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்கள் நிரப்பப்படுமா? அல்லது அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ள மறு தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

பணி நிரவல் தந்த பலன் : 10 ஆயிரம் ஆசிரியர்கள் அதிரடி மாற்றம்

குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியர்களும், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்த அவல நிலையை களைய, சமீபத்தில் நடந்த பணி நிரவல் மூலம், 10 ஆயிரம் ஆசிரியர்கள், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். விருப்பம் போல் பணி: துவக்கப்பள்ளியாக இருந்தால், 30 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஒன்பது, 10ம் வகுப்புகளில், 40 மாணவருக்கு, ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில், பாட வாரியாக, ஆசிரியர் இருக்க வேண்டும். இதற்கு மாறாக, குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியரும்; மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலைமை, பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், தென் மாவட்டங்களில் காலி இடங்கள் ஏற்படுவதை கண்காணித்து, அதற்கேற்ப நடைமுறைகளை மேற்கொண்டு, அங்கே பறந்து விடுகின்றனர். இதனால், வட மாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநகரங்கள் மற்றும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளில், தேவையை விட, அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த வகையில், மாணவ, மாணவியர் குறைவாக உள்ள பள்ளிகளில், 10 ஆயிரம் பேர் இருந்தது கண்டறியப்பட்டது.


   முதல்வர் அதிரடி: இதுகுறித்த ஆய்வுக்குப் பின், ""ஆசிரியர் இல்லாததால், மாணவர் படிப்பு பாதிக்கக் கூடாது. தேவையுள்ள பள்ளிகளில், போதிய ஆசிரியரை நியமிக்கவும், கூடுதலாக உள்ள ஆசிரியரை, மாறுதல் செய்யவும் தயங்க வேண்டாம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு, முதல்வர் பச்சைக்கொடி காட்டினார். கடந்த மாதம் நடந்த கலந்தாய்வில், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில், 10 ஆயிரம் ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். அனைவருமே, வட மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தில் இருந்து மட்டும், 150 ஆசிரியர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். தொடக்கக் கல்வித் துறையில், 3,200 ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் மாற்றப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறையில், 6,500 ஆசிரியர்கள் வரை, பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். "அரசின் அதிரடியால், ஆசிரியர்கள் புலம்பினாலும், அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது' என, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



   புதிய நியமனம் எப்போது? தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறும் போது, ""தொடக்கக் கல்வித் துறையில், 3,000 இடைநிலை ஆசிரியர்களும்; பள்ளிக் கல்வித் துறையில், 6,000 ஆசிரியர்களும், விரைவில் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களில், இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், மாணவர்கள் மேலும் பலன் பெறுவர்,'' என்றார்.

அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள்.

Sunday, 26 August 2012

பொது வைப்பு நிதி - தற்காலிக முன்பணம் - விளக்கங்கள்

ஆர்.டி.ஐ., கேள்விகள் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்: மத்திய அரசு கட்டுப்பாடு

"தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
   மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து, பொதுமக்கள், தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, 2005ம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்கள் கேட்டு, கேள்விகள் சமர்ப்பிக்கும் போது, அந்தக் கேள்விகள், இவ்வளவு வார்த்தைகளில் தான் இருக்க வேண்டும் என, இதுவரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கேள்விகள், 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என, கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

   இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய பொது தகவல் அலுவலர் பெயர், முகவரி, விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் இணைப்புக்கள் போன்றவை கணக்கில் எடுப்பதில்லை. இருப்பினும், 500 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.மேலும், மத்திய தகவல் ஆணையரிடம், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்பவர்கள், அவர்களே நேரடியாக ஆஜராக வேண்டும் அல்லது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இல்லையெனில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டு, பதில்கள் தபாலில் அனுப்பப்படும் போது, 50 ரூபாய்க்கு மேல், செலவு ஏற்பட்டால், கூடுதலாகும் தபால் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.

   தகவல்கள் கோரி விண்ணப்பம் செய்வோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர் என்பதற்கான, அரசு வழங்கிய சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண வில்லையை இணைக்க வேண்டும்.இவ்வாறு பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

   இதில் கூறியுள்ளதாவது: திங்கள் கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்கவேண்டும்.

 மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும். மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்லவேண்டும். 

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க புதிய வழிமுறை

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

   இதில் கூறியுள்ளதாவது: திங்கள்கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்ய வேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும்.மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்ல வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்க வேண்டும்.வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Saturday, 25 August 2012

TamilNadu Teachers Eligiblity Test 2012- Tentative Provisional List of Candidates and Individual Query


ஆசிரியர் தகுதி தேர்வு ரிசல்ட் வெளியீடு-அக்டோபர் 3-ல் மறுதேர்வு: வாரியம் திடீர் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நள்ளிரவில், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 6.76 லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து அக்டோபர் 3-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.     அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் எழுதினர்.  10 நாட்கள் இடைவெளிக்கு பின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.

     தகுதி தேர்வு கேள்வி தாள் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், கீ ஆன்சர் விடைகளில் குழப்பம் இருந்தது.
இதை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. விளக்கம் கொடுக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

   இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட கூடாது என்று தடை கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. இதை அறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை வாரிய இணையதளமான www.trb.tn.nic.in அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில், 90 சதவீதம் பேர் 150 மதிப்பெண்களுக்கு 65 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால், 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

    நேற்று இரவு வெளியிடப்பட்ட தகுதி தேர்வு முடிவுகளில் சுமார் 2448 பேர் மட்டும்தான் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியோர் அவர்களின் தேர்வு எண்ணை அதில் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.  ஆசிரியர் தகுதி தேர்வில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அக்டோபர் 3-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று காலை அறிவித்தது.

தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்படுமா?

   ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. கணித தேர்வுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை. அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என்று தேர்வு எழுதியோர் பலரும் குற்றம்சாட்டினர். இதனால் தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று தேர்வு எழுதியோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.


   2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், டிசம்பரில் மறுதேர்வு நடத்தப்படலாம் என்றும் கல்வித் துறை வட்டாரங்களில் சொல்லப்பட்டது. 


   இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட்டில் 2448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதியோரின் கோரிக்கையை ஏற்று, தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடித்தவர்கள்

   ஆசிரியர் தகுதித்தேர்வு கேள்விகள் கடினம் என்ற போதிலும் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சித்ரா என்பவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 131 மதிப்பெண் பெற்ற ஷர்மிளா 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். சமூக அறிவியல் பாடப்பிரிவில் அருள்வனி 125, பிருந்தா 124, செந்தில்குமார் 124 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Thursday, 23 August 2012

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது-23-08-2012

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன. கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

சுற்றுச் சூழல் நண்பன் திட்டத்தில் (‘பரியாவரன் மித்ரா‘) உறுப்பி னர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மத்திய அரசு சார்பில் ‘பரியாவரன் மித்ரா‘ ( சுற்றுச்சூழல் நண்பன்) திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் இரண்டு கோடி பேரை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த திட்டத்தை, சுற்றுச் சூழல் கல்வி மையம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் அனைத்து மேல் நிலை, உயர் நிலை, நடு நிலைப்பள்ளிகளை சேர்ந்தவர்களை உறுப்பி னர்களாக சேர்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க புதிய வழிமுறை

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

   இதில் கூறியுள்ளதாவது: திங்கள்கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்ய வேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும். மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும். மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்ல வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Sunday, 19 August 2012

ஆசிரியர் நியமனம், மாறுதல் மற்றும் துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தனி அலுவலர்கள் பள்ளிக் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர்

பணி நியமனம், மாறுதல் குறித்து,தொடுக்கப்படும் வழக்குகள், அதிகளவில் சேர்ந்துள்ளதால், அவற்றை உடனுக் குடன் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. வழக்குகள் குறித்த தகவல்கள், அதற்கென உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும், தினசரி கோர்ட்டில் வழக்காடப்படும் வழக்குகள், அவற்றின் அடுத்த நிலை ஆகியவை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது, தகவல்களை அறியவும், வழக்குகளை விரைவாக முடிக்க உதவி செய்யும் வகையிலும், அலுவலர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. இதன்படி, பிரிவு அலுவலர் அல்லது உதவிப் பிரிவு அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர், தினசரி மாலை 4 மணிக்கு ஐகோர்ட் சென்று, அரசு வழக்கறிஞர்களிடம் வழக்கு குறித்த நிலவரங்களை அறிந்து, துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கான அலுவலர் பட்டியலையும், துறை வெளியிட்டுள்ளது

சென்னை தொடக்கக் கல்வி இயக்கக கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு

மூன்று ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு.--பதில்.

மூன்று ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து வழக்குப் பதிவு செய்த விபரம். ஆறாவது ஊதியக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை ஏற்ப்படுத்தினர்.ஊதியத்தை உயர்த்தி தருகிறோம் என்று  கூறி பெற்று வந்த ஊதியத்தை பறித்துக்கொண்டனர். ஐந்தாவது ஊதியக்குழு தொடந்து இருந்தாலே தற்போது பெரும் ஊதியத்தை விட அதிகம் பெற்று இருப்போம்.ஐந்தாவது ஊதிக்குழுவில் அடிப்படை ஊதியம் Rs3050 பெற்று வந்த நம்மைவிட கல்வித்தகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிதவர்களுக்குகூடRs. 9300 -34800+4200 முதல் 4600 வரை தர ஊதியம் வழங்கி உள்ளனர். மேலும்,அரசாணை எண்  23 ல் Rs. 750 தனி  ஊதியமாக ஒதுக்கப்பட்டது. அதில் அமைச்சு பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் ஊதிய முரண்பாடு ஏற்படும்  என்று ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக்  கூறியுள்ளனர்.நம்மைவிட அவர்களுடைய கல்வித்தகுதி குறைவு.மேலும் சுமார்  1,16,000 க்கும் மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்தால், பொருள் செலவு அதிகமாகும் என்று தவறான தகவல்களை கூறியுள்ளனர். மருத்துவ துறையில் புதிதாக நியமனம் பெரும் மருத்துவர் கிராமப்புறங்களில் கண்டிப்பாக சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்றும் அதற்கு  ஊக்க ஊதியமும் வழங்கி வருகின்றனர்.ஆனால்,இடைநிலை ஆசிரியர்கள் கரடு முரடான, பாதைகளே இல்லாத இடங்களிலும் ,மலைப்பகுதிகளிலும் தன்னலம் பாராமல் வருங்கால பாரதம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக கிராமங்களில் பணிபுரிகின்றனர். ஆதலால், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் தருகின்றோம் என்று, ஒரு நபர் குழுவில் கூறியுள்ளனர்.கிராமப்புறங்களில்  பணிபுரிவதற்கு  மேலும் ஒரு ஊக்க ஊதியம் அரசு தான் தரவேண்டும்.இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத்தான் நமது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து உயர் நீதி மன்றத்தில் வழக்குப்  பதிவு செய்துள்ளனர்.நமது இயக்கமும் மூன்று நபர் ஊதியக்குழுவிடம் நமது ஊதிய முரண்பாட்டை நேரில்  வலியுறுத்தி  உள்ளோம். இதற்கு தற்போது செலவினத்தின் செயலாளர் உயர்திரு.S .கிருஷ்ணன் I.A.S  அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற  வழக்கு எண்MP.(MD) No2  of 2012 in W.P.(MD)9218 of 2012. ற்கு  உயர் நீதிமன்றத்திற்கு     பதில் அளித்துள்ளார்.அவற்றில் நமது ஊதியம் 5200 - 20200 + 2800 இருந்து  9300 -34800 +4200   வழங்குமாறு  வழக்கு பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு அரசு பரிசீலித்து உரிய அரசாணை பிறப்பிக்கும் என்று சாதகமான பதில் அளித்துள்ளார்.விரைவில், நமக்கு நல்ல ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் .

RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS - MAY 2012

RIGHT TO INFORMATION ACT - 2005

அக்டோபர் 7ம் தேதி செட் தேர்வு

மாநில அரசின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செட் தேர்வு, வரும் அக்டோபர் 7ம் தேதி, மாநிலமெங்கும் 10 மையங்களில் நடக்கிறது. புதுச்சேரி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேரவும் இத்தகுதி தேர்வு செல்லும். தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களை பாரதியார் பல்கலைக்கழகம் வரவேற்கிறது. யு.ஜி.சி. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் பாடப்பிரிவுகள், மானுடவியல், சமூகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை.முதுநிலைப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

STATE ELIGIBILITY TEST (SET) FOR LECTURESHIP, OCTOBER 2012

சுததந்திர தின வாழ்த்துகள்.